இந்தியாவுடன் சிறந்த ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கை; அமெரிக்கா புகழாரம்

புதுடில்லி: அமெரிக்கர்களை குறிவைத்து சைபர் குற்றங்களை நிகழ்த்தி வந்த கும்பலை ஒழித்ததற்காக சிபிஐக்கு அமெரிக்கா அரசு நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு முதல் அமெரிக்கர்களை குறி வைத்து ரூ.350 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த கும்பலை, அமெரிக்காவின் எப்பிஐ உடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் சிபிஐ முறியடித்தது.
அமிர்தசரஸில் உள்ள குளோபல் டவரில் 'டிஜிகாப்ஸ் தி ப்யூச்சர் ஆப் டிஜிட்டல்' என்ற பெயரில் மோசடி கும்பல் ஒன்று போலி கால் சென்டரை நடத்தி பணம் பறித்து வந்தது. இதனை கண்டுபிடித்து சிபிஐ சீல் வைத்தது.
எப்பிஐ உடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட இந்த சோதனையில், அந்தக் கும்பலைச் சேர்ந்த ஜிகர் அகமது, யஷ் குரானா, மற்றும் இந்தர் ஜீத் சிங் பாலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், ரூ.54 லட்சம் ரொக்கம், 8 செல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்கா தூதரகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "இந்தியா - அமெரிக்காவின் ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கையின் ஒரு மிகப்பெரிய வாரம்" என்று குறிப்பிட்டது.
மேலும், "பகிரப்பட்ட தகவல் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம், மோசடிகளைத் தடுப்பதற்கும், நமது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சிபிஐ மற்றும் எப்பிஐ இணைந்து ஒன்றாக பணியாற்றி வருகின்றன. சிஐபியின் ஒருங்கிணைந்த பணி மற்றும் ஆதரவுக்கு நன்றி," என்றும் குறிப்பிட்டுள்ளது.



மேலும்
-
திமுக அரசின் பேட்ச் வொர்க் போல இல்லை... முதல்வருக்கு அண்ணாமலை பதில்
-
வரதட்சணை மரண வழக்கில் புதிய திருப்பம்: சிலிண்டர் வெடித்ததால் நிக்கிக்கு தீக்காயங்கள்!
-
7 ஆண்டுக்கு பிறகு பயணம்; ஆகஸ்ட் 31ல் சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி
-
சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழக குடும்பம்; 4 பேர் பலியான சோகம்!
-
மாணவர், பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு: அறிவித்தது அமெரிக்கா
-
ஹிமாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி; 2 பேர் மாயம்