பாறை விழுந்து -போக்குவரத்து பாதிப்பு

பந்தலுார்; நீலகிரி மாவட்டம் மற்றும் வயநாடுபகுதிகளிலிருந்து, கோழிக்கோடு செல்வதற்கு தாமரைச்சேரி தேசிய நெடுஞ்சாலை சாலை முக்கிய வழிபாதையாக உள்ளது. இந்த பாதையில் 'லெக்கிடி' என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை லேசான மழை பெய்து வந்த நிலையில் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.

அதில், மண், பாறைகள், மரங்கள் சாலையில் குவிந்தன. இரவு நேரம் என்பதால், நிலச்சரிவின் பாதிப்பு குறித்து தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை நிலயவியது. இதனால், மக்கள் நடந்து செல்லவும், வாகன போக்குவரத்தும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

கேரளா வயநாடு மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் நேற்று காலை முதல் அப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வயநாடு கலெக்டர் மேகஸ்ரீ தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

கலெக்டர் கூறுகையில், 'பெரிய பாறைகள் சாலையில் விழுந்து உள்ளதால் அவற்றை உடைத்து அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், மரங்கள் மற்றும் மண்ணை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. முழுமையான ஆய்வுக்கு பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்,' என்றார்.

நிலச்சரிவு காரணமாக, தமிழகம் -கர்நாடகா- வயநாடு பகுதிகளிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும், குட்டியடி, மானந்தவாடி மற்றும் நீலகிரி நாடுகாணி, நிலம்பூர் சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Advertisement