7 ஆண்டுக்கு பிறகு பயணம்; ஆகஸ்ட் 31ல் சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி

6


புதுடில்லி: ஏழாண்டுக்கு பிறகு முதல் முறையாக சீனாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 31ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.


சீனாவின் தியான்ஜினில் ஆகஸ்ட் 31ம் தேதி நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனால், அவர் 7 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இரு தரப்பு உறவுகள் தொடர்பான சந்திப்பை நடத்துவார்.

இந்த சந்திப்பில், இந்தியா-சீனா உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை நடக்கும் என தெரிகிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே சீர்கெட்டுள்ளது. இதனால் இந்த சந்திப்பு உலகம் முழுவதும் இந்தியா - சீனா இடையிலான சந்திப்பு உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது .



ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெறும் இரண்டு நாள் உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் புடின் உட்பட 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் பங்கேற்கின்றனர். மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்
2020ம் ஆண்டு எல்லை மோதல்களைத் தொடர்ந்து பதட்டங்களைத் தணிக்க, இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மோடியின் முதல் சீனப் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement