சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழக குடும்பம்; 4 பேர் பலியான சோகம்!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில், திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர்4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், வயது 45.
கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கரில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டம், ஜகல்பூரில் 38 வயது மனைவி பவித்ரா, 8 வயது மகள் சவுத்தியா, 6 வயது மகள் சவுமிகா ஆகியோருடன் குடும்பமாக வசித்து வந்துள்ளார்.
திருப்பதி கோவிலில் நடைபெற இருந்த திருமணத்தில் பங்கேற்க ராஜேஷ்குமார், மனைவி மகள்களுடன் காரில் சொந்த ஊர் புறப்பட்டார். சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக மழை வெள்ளத்தில் சிக்கிய ராஜேஷ் கார் நீரில் அடித்துச் சென்றுள்ளது.
நீரில் மூழ்கி காருக்குள் இருந்த நான்கு பேரும் பரிதாபமாக இறந்தனர்.
கரை ஒதுங்கிய காரில் இருந்து 4 பேர் உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து 4 பேர் உடல்களையும் 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து (2)
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
28 ஆக்,2025 - 17:14 Report Abuse

0
0
Reply
Nada raja - TIRUNELVELI,இந்தியா
28 ஆக்,2025 - 16:51 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு குண்டு மிரட்டல்
-
கைலாயமே மிகப்பெரிய ஆன்மிக நுாலகம்: சத்குரு
-
குருவாயூரில் 'இல்லம் நிறை' பூஜை; நெற்கதிருடன் பக்தர்கள் பங்கேற்பு
-
திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபரானார் சபாபதி தம்பிரான்
-
முதலைப்பட்டி மாரியம்மன் கோவில் விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
-
பைக் மீது லாரி மோதி பெயின்டர் உயிரிழப்பு
Advertisement
Advertisement