மாணவர், பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு: அறிவித்தது அமெரிக்கா

10


வாஷிங்டன்: வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான விசாவில் அமெரிக்கா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அந்த வகையில், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான விசாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாணவர்கள் விசாவின் மூலம் வெளிநாட்டவர்கள் 4 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் தங்க முடியாது. அதேபோல, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் 240 நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க முடியும். மேலும் விண்ணப்பித்தால் 240 நாட்கள் கூடுதலாக தங்கலாம். அதேவேளையில், சீன பத்திரிகையாளர்களுக்கு 90 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக, மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்பட்டு வந்தது.

இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
மிக நீண்ட காலமாக, கடந்த ஆட்சியாளர்கள் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பிற விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் கிட்டத்தட்ட காலவரையின்றி தங்க அனுமதித்துள்ளன. இது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது. வரி செலுத்தும் மக்களின் பணத்தை கணக்கிட முடியாத அளவிற்கு வீணாக்குகிறது. இது அமெரிக்க குடிமக்களுக்கு பாதகமாக உள்ளது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது

Advertisement