மத்திய அரசுடன் மோதல் இல்லை; நல்ல உறவு உள்ளது: மோகன் பகவத் திட்டவட்டம்

8

புதுடில்லி: '' மத்திய அரசுடன் எந்த மோதலும் இல்லை. நல்ல உறவு உள்ளது. பாஜவுக்காக நாங்கள் எந்த முடிவும் எடுப்பது இல்லை'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

முக்கியம்



டில்லியில் நிருபர்களைச் சந்தித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது: தொழில்நுட்பத்திற்கு மக்கள் தான் எஜமானர்களாக இருக்க வேண்டும். அதற்கு அடிமையாக இருக்கக்கூடாது. கல்வி முக்கியமானது. கல்வியறிவு அற்றவர்களின் கைகளில் தொழில்நுட்பம் சென்றால், அது பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்.

கல்விக் கொள்கை





கல்வி மிகவும் முக்கியமானது. கல்வி என்பது வெறும் தகவல்களைச் சேகரித்து வைப்பது மட்டுமல்ல. ஒருவரை மனிதனாக மாற்ற வேண்டும். அத்தகைய கல்வி முறையே எதிர்பார்க்கிறோம். நமது கல்வி அமைப்பு அழிக்கப்பட்டு விட்டது. நாம் அடிமைகளாக இருந்த போது, புதிய கல்வி முறை கொண்டு வரப்பட்டது. ஆட்சியாளர்களுக்கு ஏற்ப அமைப்பு மாற்றப்பட்டது.

ஆனால், இப்போது சுதந்திரம் பெற்று விட்டோம். நாம் அரசுகளை நடத்துவது மட்டும் அல்லாமல், மக்களும் அதனை பின்பற்ற வேண்டும். இந்த திசையில் நாம் பயணிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் இந்த விஷயங்கள் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது.

பிரச்னையில்லை



வரலாற்றை மாணவர்கள் படிக்க வேண்டும்.நமது பாரம்பரியமும், கலாசாரமும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். நம்பிக்கைகள் மதத்துடன் தொடர்புடையது அல்ல. அவை சமூகத்துடன் தொடர்புடையது. நாம் ஆங்கிலேயராக மாற வேண்டியதில்லை. ஆனால், ஆங்கிலம் கற்றுக் கொள்வதில் எந்த தீங்கும் இல்லை.

ஒரு மொழியாக அது எந்த பிரச்னையையும் ஏற்படுத்தாது. சார்லஸ் டிக்கன்ஸ் படைப்புகளை படிப்பது தவறு இல்லை. ஆனால், பிரேம்சந்த் போன்றவர்களின் படைப்புகளை விட்டுவிடக்கூடாது.




குருகுலக் கல்வி





பாரதத்தைப் புரிந்துகொள்ள சமஸ்கிருதம் தேவைப்படுகிறது; வேத காலத்தின் 64 அம்சங்களும் கற்பிக்கப்பட வேண்டும். குருகுலக் கல்வியை மாற்றாமல், அதனை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும். நமது குருகுல மாதிரி பின்லாந்தின் கல்வி மாதிரியைப் போன்றது. கல்வியில் முன்னணி நாடான பின்லாந்தில், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தனிப் பல்கலைக்கழகம் உள்ளது




நேர்மை





ஆர்எஸ்எஸ் என்பது சுதந்திரமான தன்னாட்சி அமைப்பு. இதற்கு துணை அமைப்புகள் கிடையாது. எங்களுக்கு மத்திய, மாநில அரசுகளுடன் நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நேர்மையாக உழைக்கின்றனர்.



@block_P@பாஜவுக்காக ஆர்எஸ்எஸ் முடிவு எடுக்கிறது என்பதில் உண்மையில்லை. அனைத்து முடிவுகளும் கூட்டாக எடுக்கப்படுகிறது. அமைப்பை நிர்வகிப்பதில் எனக்கு திறமை உண்டு. அரசை நடத்துவதில் பாஜவுக்கு திறமை உண்டு. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆலோசனைகளை பரிமாறி கொள்கிறோம். ஆனால், எங்களது துறைகளில் முடிவுகளை சுதந்திரமாக எடுக்கிறோம்.block_P


நாங்கள் ஆலோசித்து ஒரு மித்த முடிவு எடுக்கிறோம். நிர்வாகத்தில் உள்முரண்பாடுகள் கொண்ட அமைப்புகள் உள்ளன. ஆனால், எந்த வகையிலும், எந்த மோதலும் இல்லை . புதிய பாஜ தலைவர் தேர்வு செய்யும் பணி எங்களுடையதாக இருந்து இருந்தால், இவ்வளவு காலதாமதம் ஆகியிருக்காது.





வெளிப்படை





எதிர்ப்பாளர்கள், எங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உதவி கேட்டால், அதனை செய்ய தயாராக இருக்கிறோம்.



@block_Y@முடிவு செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்பு பார்லிமென்ட். வெளிப்படைத்தன்மையை கொண்டு வர பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் பதவியை பறிக்கும் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.block_Y





3 குழந்தைகள்






@block_B@மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். வலுக்கட்டாயமாக ஒருவரை மதம் மாற்றக்கூடாது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள்தொகை சமநிலையற்ற நிலையில் உள்ளது. இதற்கு மதமாற்றமும் முக்கிய காரணம். block_B


அடுத்து விஷயம் ஊடுருவல். ஒவ்வொரு நாட்டுக்கும், சொந்த விதிகள், ஒழுங்குமுறைகள் இருக்கும். எனவே, ஊடுருவல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்காக அரசு அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறது. வேலைவாய்ப்பை, நமது நாட்டு மக்களுக்கு வழங்குவது முக்கியமானது.ஒட்டு மொத்த உலகமும் ஒரே குடும்பம். ஆனால், ஒவ்வொரு இடத்துக்கும் என ஒரு தரம் இருக்கும். சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகள் . சட்டவிரோத அகதிகளை தடுப்பது என்பது, 'வசுதேவ குடும்பகம்' என்பதற்கு மாறுபட்ட கருத்தாக இருக்காது.


@quote@ ஒவ்வொரு குடும்பமும் 3 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். அப்போது தான் மக்கள் தொகை போதுமானதாகவும், கட்டுக்குள்ளும் இருக்கும்.quote




பெயர்




@quote@ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்களை சாலைகளுக்கு பெயர் வைக்கக்கூடாது. சாலைகளுக்கு முஸ்லிம் பெயர் வைக்க வேண்டாம் என சொல்லவில்லை. சாலைகளின் பெயர் மாற்றுவது முஸ்லிம்களுக்கு எதிரானது கிடையாது. நாம் அனைவரும் ஒரே மக்கள். அனைத்துக்கும் மேலானது இந்தியா. quote



இந்தியர்கள்




நாடு பிரிவினையை ஆர்எஸ்எஸ் எதிர்க்கவில்லை எனசொல்வது தவறு. அதனை நாங்கள் எதிர்த்தோம். ஆனால், அப்போது போதுமான பலம் கொண்டதாக ஆர்எஸ்எஸ் இல்லை. அகண்ட பாரதம் என்பது வாழ்க்கையின் உண்மை.


நமது மூதாதையர்களும், கலாசாரமும் ஒன்றே என்பதை உணர வேண்டும். நாம் அனைவரும் சமமாக இருக்கும் போது ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை பற்றி ஏன் பேசவேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள். யாரையும், தாக்குவதில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நம்பிக்கையில்லை.





தடை கூடாது





இந்தியாவில் பிறந்த அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான். அதேநேரத்தில் கலந்துரையாட பொதுவான ஒரு மொழித்தேவைப்படுகிறது. அது அந்நிய மொழியாக இருக்கக்கூடாது. மொழி அடிப்படையில் பிரச்னை இருக்க வேண்டியது இல்லை. பொதுவான மொழி குறித்து அனைவரும் ஆலோசித்து முடிவெடுக்கலாம். அனைவரும் தாய்மொழியில் புலமை பெற்றவராக இருக்க வேண்டும். மாநிலங்களின் மொழி மற்றும் பொதுவான மொழிகளையும் கற்க வேண்டும். அதில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது.


ஜாதி என்பது ஒரு தடை. முன்னேறி செல்வதற்கு காலாவதியானது எது இருந்தாலும் அது அழிந்துவிடும். ஜாதி என்பது ஒரு காலத்தில் இருந்தது. தற்போது அது இல்லை.



@block_B@

ஓய்வா

குடும்பத் தலைவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக வருவதற்கு தடை கிடையாது. ஆனால், அந்த நபர் தனது நேரம் முழுவதையும் அமைப்பிலேயே செலவிட வேண்டும். நான் ஓய்வு பெறுவேன் என்றோ அல்லது 75 வயதானவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்றோ நான் சொன்னது இல்லை.block_B






தன்னார்வலர்கள்





ஆர்எஸ்எஸ் அமைப்பை பொறுத்தவரை நாங்கள் தன்னார்வலர்கள். நாங்கள் என்ன செய்ய கேட்டு கொள்ளப்பட்டோமோ அதனை செய்து வருகிறோம். இங்கு நான் ஒருவன் மட்டுமே கிடையாது. 10 பேர் தலைமைப் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளனர். எந்த நேரத்திலும் ஓய்வு பெற்று, அமைப்புக்காக நீண்ட நாட்கள் பணியாற்ற தயாராக இருக்கிறோம். இந்தியாவில் தனது பணியில் ஆர்எஸ்எஸ் கவனமாக உள்ளது. மற்ற நாடுகளில் உள்நாட்டு சட்டப்படி, தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். ராமர் கோவில் இயக்கத்தில் மட்டுமே ஆர்எஸ்எஸ் ஆதரவு அளித்தது. வேறு எந்த இயக்கத்திலும் சேரவில்லை. ஆனால், தன்னார்வலர்கள் விரும்பினால் இணையலாம்.


அரசுக்கு தெரியும்





மூட நம்பிக்கைகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அறிவியல் பார்வை எங்களுக்கு உள்ளது. பாரத மாதாவை முதலில் வணங்குகிறோம். பின்னர் ஒரு உலகளாவிய கடவுளை வணங்குகிறோம். சர்வதேச வர்த்தகம் முக்கியமானது. எந்த நட்புக்கும் நெருக்கடி கூடாது. சுதேசி மற்றும் தன்னிறைவு கொள்கையில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.


டிரம்ப்பை எப்படி கையாள வேண்டும் என நாங்கள் அரசுக்கு சொல்லவில்லை. என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்கு தெரியும். அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம். நாட்டுக்காக வாழவும் மரணம் அடையவும் கற்றுக்கொள்ள வேண்டும். தன்னிறைவு பெறவும், நாடு வளர்ச்சி அடையவும் தொழில்முனைவோரை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement