சீர்பட்டது இந்தியா - கனடா உறவு; துாதர்கள் நியமித்து இரு நாடுகளும் அறிவிப்பு

புதுடில்லி:
கனடாவுடன் உறவுகள் சீர்பட்டு வரும் நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு அந்த
நாட்டுக்கான இந்திய துாதரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. 1990ம் ஆண்டு
ஐ.எப்.எஸ். அதிகாரியான தினேஷ் பட்நாயக் துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவில்,
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2022ம் ஆண்டு சுட்டுக்
கொல்லப்பட்ட சம்பவத்தில் , இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு உள்ளதாக அந்த
நாட்டின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதனால்
இந்திய -கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது.
கடந்த 2024ம் ஆண்டு
அக்டோபரில் கனடாவுக்கான இந்திய தூதராக இருந்த சஞ்சய் குமாரை மத்திய
அரசு திரும்ப பெற்றது. ஜஸ்டின் ட்ரூடோ இருந்தவரை இந்திய கனடா உறவுகள்
சீர்படவில்லை.
அந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக, ஜஸ்டின்
ட்ரூடோ பதவி விலகினார். புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்ற நிலையில்
இரு நாட்டு உறவுகள் சீரடைந்து வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், 9
மாதங்களுக்குபின் கனடாவுக்கான புதிய இந்திய தூதராக தினேஷ்பட்நாயக்
நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, இந்தியாவுக்கான கனடா துாதரும்
நியமிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்டோபர் கூட்டர் என்பவரை துாதராக நியமித்து
அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.


மேலும்
-
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு குண்டு மிரட்டல்
-
கைலாயமே மிகப்பெரிய ஆன்மிக நுாலகம்: சத்குரு
-
குருவாயூரில் 'இல்லம் நிறை' பூஜை; நெற்கதிருடன் பக்தர்கள் பங்கேற்பு
-
திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபரானார் சபாபதி தம்பிரான்
-
முதலைப்பட்டி மாரியம்மன் கோவில் விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
-
பைக் மீது லாரி மோதி பெயின்டர் உயிரிழப்பு