குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு


சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் இன்று( ஆக.,28) வெளியிடப்பட்டன.


சப் கலெக்டர், டிஎஸ்பி, வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்காக, கடந்த ஜூன் 15 ம் தேதி தமிழகம் முழுவதும் இந்த தேர்வில் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருந்தனர். இதன் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வு முடிவினை இன்று வெளியிட்டது.


இதில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்த கட்டமாக டிசம்பர் மாதம் நடக்கும் முதன்மைத் தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement