அமெரிக்கர்களையே பாதிக்கும்: இந்தியா மீதான வரிவிதிப்புக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு

வாஷிங்டன்: இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததற்கு அமெரிக்க பார்லிமென்டின் வெளியுறவு கொள்கைக்கான குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அமெரிக்கர்களையே பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.
இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த நட்புறவு, அதிபர் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால் சமீப காலமாக பதற்றத்தில் உள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக பற்றாக்குறை கொண்ட நாடுகளுக்கு பரஸ்பர வரியை அவர் விதித்துள்ளார். அந்த வகையில், இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதித்தார். இது, கடந்த 7ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக, 25 சதவீத வரியை விதித்தார். இது, நேற்று அமலுக்கு வந்தது. இந்த கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது என கூறிய நம் வெளியுறவு அமைச்சகம், நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்காகவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக விளக்கமளித்தது.
ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் எந்தவொரு நாட்டுக்கும் தடை விதிக்கப்படும் என்ற நிலைப்பாட்டை டிரம்ப் நிர்வாகம் தேர்வு செய்து இருந்தால் அது கவனிக்கத்தக்கது. ஆனால், இந்தியா மீது மட்டுமே கவனம் செலுத்தும் முடிவு, எல்லாவற்றிலும் குழப்பமான கொள்கையை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் சீனா அதிக தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. ஆனால், அந்நாடு தண்டனையில் இருந்து விடுபட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.










மேலும்
-
முதலைப்பட்டி மாரியம்மன் கோவில் விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
-
பைக் மீது லாரி மோதி பெயின்டர் உயிரிழப்பு
-
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
-
காணியாளம்பட்டியில் உயர்வுக்கு படி முகாம்
-
சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினருக்கு 20 ஆண்டு சிறை
-
தக்காளி மகசூல் பாதிப்பு; விலை சரிவால் விவசாயிகள் அதிர்ச்சி