திமுக அரசு மீது குறை சொல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் சிலர்.... தாங்கி பிடிக்கிறார் திருமா!

சென்னை: ''திமுக அரசு மீது எப்போதும் குறை சொல்வதை தங்களது வாடிக்கையாக கொண்டிருக்கிற சிலர் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்'' என ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார்.
சென்னையில் விசிக தலைவர் திருமாவளன் கூறியதாவது: அதிமுக, ஈவெரா பாசறையில் வளர்ந்த இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜ போன்ற சக்திகள் இங்கே, வளருவதற்கு இடம் தரவில்லை என்கிற கருத்து வலுவாக இங்கே உண்டு. ஆனால் அவர்களை பின்பற்ற கூடிய இன்றைய தலைவர் பழனிசாமி போன்றவர்கள் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளுக்கு கம்பளம் விரிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த துணிச்சலில் தான் அதிமுக ஆர்எஸ்எஸ் வழி நடத்துவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்ப கூடிய நிலையும் உருவாகி இருக்கிறது.
இது அதிமுகவின் நிலை எவ்வளவு பரிதாபகரமாக இருக்கிறது என்பதை உணர்த்த கூடியதாக இருக்கிறது. விஜய் அவர்களுக்கும் அதே போன்ற வேண்டுகோளை விடுத்து இருக்கிறார்கள் என்றால், விஜய் பேச்சிலும், செயலிலும் அந்த சாயல் இருப்பதாக நம்புகின்றனர் என்று தான் இதில் உணர வேண்டிய உண்மையாக இருக்கிறது. அவர் எச்சரிக்கையாக இருப்பார் என்று நான் நம்புகிறேன். பீஹாரில் எடுத்த ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு அமல்படுத்தவில்லை.
சட்டத்திலும் இடம்…!
அதனை சர்வே என்று தான் சொல்லி இருக்கிறார்கள். அது சாம்பிளிங் சர்வே, சென்செஸ் இல்லை. அதை ஜாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு ஏற்று கொள்ளாது. அதனை ஏற்றுக்கொள்ள சட்டத்திலும் இடம் இல்லை. சும்மா மாநில அரசு மீது ஏதாவது குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்று அடிப்படையில் சொல்கிறார்கள். ஒரு சர்வே தேவை என்கிற அடிப்படையில் மாநில அரசு எடுக்கலாம். அதனை நாங்களும் வரவேற்கிறோம்.
மக்கள் தொகை
நமக்கு ஒரு டேட்டா வேண்டும் என்கிற அடிப்படையில் எடுக்கலாம். அதனை அதிகாரபூர்வமாக மத்திய அரசு ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே மத்திய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அது ஜாதிவாரி அடிப்படையில் நிகழ வேண்டும். இது தான் சரியான கோரிக்கை. ஆனால், திமுக அரசு மீது எப்போதும் குறை சொல்வதை தங்களது வாடிக்கையாக கொண்டிருக்கிற சிலர் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.
சமூக நீதி பக்கம்…!
திசை மாறி சமூக நீதி பக்கம் சென்றுவிட்டேனா? எங்களுக்கு அதிமுக மேல ஒரு மரியாதை உண்டு. திராவிட இயக்கம் அல்லது சமூக நீதி இயக்கம், ஈவெரா இயக்கம், அண்ணாதுரை இயக்கம் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையில் அடிப்படையில் தான், கருத்துகளை முன் வைக்கிறோம். இல்லையென்றால் இது பற்றி சொல்ல போவது இல்லை.
தவறாக புரிந்து…!
அதிமுக திராவிட இயக்கம் என்று நம்புகிறதால் இந்த கருத்தை முன் வைக்கிறோம். இல்லை இது திராவிட இயக்கம் என்று எல்லாம் கிடையாது, நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள், அப்படி எல்லாம் பேசாதீர்கள் திருமாவளவன் என்று சொன்னால் அடுத்த நொடியில் இருந்து அதனை பேச மாட்டேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.










மேலும்
-
மத்திய அரசுடன் மோதல் இல்லை; நல்ல உறவு உள்ளது: மோகன் பகவத் திட்டவட்டம்
-
15 சதவீதம் சரிவை கண்ட ஹிந்து மக்கள் தொகை: சம்பல் வன்முறை விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி
-
பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு:மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜ தலைவர்
-
ஆம்பூர் கலவர வழக்கு: 22 பேருக்கு சிறை தண்டனை
-
குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
-
அமெரிக்கர்களையே பாதிக்கும்: இந்தியா மீதான வரிவிதிப்புக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு