சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது காமெடி பஞ்சம் நிலவுகிறது என்றே சொல்லலாம். காரணம் காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோவாகிவிட்டனர். சமீபத்தில் நடந்த ‛உயிருள்ளவரை உஷா' ரீ-ரிலீஸ் பிரஸ்மீட்டில் பேசிய டி.ராஜேந்தர் அந்த காலத்தில் படங்களில் நல்ல காமெடி இருந்தது. திறமையான காமெடி நடிகர்கள் இருந்தனர். உயிருள்ளவரை உஷா படத்தில் கூட கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்தனர். அடுத்து நான் இயக்கும் படத்தில் சில காமெடியன்களை அறிமுகப்படுத்த போகிறேன் என்றார்.
இது உண்மைதான் தமிழ் சினிமாவில் காமெடி பஞ்சம் இருக்கிறது. இப்பவெல்லாம் வயிறு வலிக்க ஏன் மனம் விட்டு கூட சிரிக்கிற காமெடி வருவது இல்லை. விவேக், மனோ பாலா போன்றவர்கள் காலமாகிவிட்டார்கள். கவுண்டமணி, செந்திலுக்கு வயதாகிவிட்டதால் நடிப்பது அரிதாகிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்களை எல்லோரையும் சிரிக்க வைத்த வடிவேலு கதை நாயகனாக நடிப்பதில் ஆர்வம் காண்பிக்கிறார். அவர் காமெடியும் முன்போல இல்லை. சந்தானம், சூரியும் ஹீரோ ஆகிவிட்டார்கள். சதீஷ் கூட அந்த வழியில் செல்கிறார்.
கருணாகரன், கருணாஸ், ரோபோ சங்கர், ரமேஷ் திலக், சாம்ஸ் போன்றவர்கள் காமெடியில் இருந்து விலகி குணச்சித்ரம் பக்கம் போய்விட்டார்கள். மொட்ட ராஜேந்திரன் பீல்ட் அவுட் ஆகிவிட்டார். இப்போது இருக்கிற பெரிய காமெடியன் யோகிபாபு மட்டுமே. அவரும் பெரிய சிரிப்பை தருவதில்லை.
கடந்த சில ஆண்டுகளில் பெயர் சொல்லும் காமெடி நடிகர்கள், காமெடி படங்கள் உருவாகவில்லை. திறமையான காமெடியன்கள், நல்ல காமெடி படங்கள் இல்லாமல் வறட்சியில் தவிக்குது தமிழ் சினிமா.













மேலும்
-
மத்திய அரசுடன் மோதல் இல்லை; நல்ல உறவு உள்ளது: மோகன் பகவத் திட்டவட்டம்
-
15 சதவீதம் சரிவை கண்ட ஹிந்து மக்கள் தொகை: சம்பல் வன்முறை விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி
-
பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு:மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜ தலைவர்
-
ஆம்பூர் கலவர வழக்கு: 22 பேருக்கு சிறை தண்டனை
-
குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
-
அமெரிக்கர்களையே பாதிக்கும்: இந்தியா மீதான வரிவிதிப்புக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு