உலக பாட்மின்டன்: பிரனாய் தோல்வி

பாரிஸ்: உலக பாட்மின்டன் 2வது சுற்றில் இந்திய வீரர் பிரனாய் தோல்வியடைந்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரனாய் (34வது இடம்), உலகின் 'நம்பர்-2' டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சென் மோதினர். முதல் செட்டை 8-21 என இழந்த பிரனாய், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21-17 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் கடைசி வரை போராடிய பிரனாய் 21-23 என போராடி இழந்தார்.


ஒரு மணி நேரம், 21 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய பிரனாய் 8-21, 21-17, 21-23 என்ற
கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Advertisement