கல்வார்பட்டி சாலையை சீரமைக்க வேண்டுகோள்

அரவக்குறிச்சி, :குரும்பபட்டியிலிருந்து, கல்வார்பட்டி செல்லும் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சேந்த

மங்கலம் கீழ்பாக்கத்தில் அமைந்துள்ளது குரும்பபட்டி. இங்கிருந்து கல்வார்பட்டிக்கு ரங்கமலை வழியாக சாலை செல்கிறது. மேலும் இச்சாலை குரும்பபட்டி மற்றும் இடையகோட்டை பகுதிகளை இணைக்கிறது


. சேந்தமங்கலம் கீழ் பாக தொடக்க இடத்திலிருந்து, குரும்பபட்டி வரை இச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. குரும்பபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளியில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் இச்சாலையை பயன்படுத்துவதால் மாணவர்களின் நலன் கருதி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் பயணிக்கும்போது, மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இச்சாலையை நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து, சீரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement