அதிபராக பணியாற்றவும் தயார்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பளீச்

வாஷிங்டன்: சோகம் நடந்தால் அதிபராக பணியாற்ற தயார் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ். இவர் அமெரிக்க துணை அதிபராக பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து ஜே.டி.வான்ஸ் கூறியதாவது:
அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். மீதமுள்ள பதவிக்காலத்தை அவரால் தொடர முடியும். அமெரிக்க மக்களுக்கு சிறந்த காரியங்களை செய்வார் என நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
அவர் நிறைய நல்ல விஷயங்களை செய்து உள்ளார். கடவுள் அனுமதிக்கட்டும்.
ஒரு பயங்கரமான சோகம் நடந்தால், அதிபராக பணியாற்ற தயார் . கடந்த 200 நாட்களில் நான் பெற்றதை விட சிறந்த வேலைப் பயிற்சியை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உடல்நிலை குறித்த ஊகங்களுக்கு மத்தியில், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கருத்துக்கள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஜே.டி.வான்ஸ்?
* அமெரிக்கா துணை அதிபராக ஜே.டி.வான்ஸ், 41, பதவி ஏற்றதை தொடர்ந்து அவரது மனைவி உஷா வான்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி ஆனார்.
* உஷா வான்ஸ், பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.
* 2014ம் ஆண்டில் ஜே.டி.வான்ஸ்-ஐ கரம் பிடித்த உஷாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
* துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவின் மருமகன் என்பதால் இந்தியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.







மேலும்
-
உத்தராகண்டில் 2 இடங்களில் மேகவெடிப்பு; சிக்கி தவிக்கும் குடும்பங்கள்; மீட்பு பணி தீவிரம்
-
ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 உயர்வு
-
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்; 3 பேர் பலி
-
நமது தேசம் தொடர்ந்து முன்னேற வேண்டும்: துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்
-
பெண் வக்கீலின் அந்தரங்க வீடியோ தமிழகத்தில் பரவுவது எப்படி? போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி
-
துபாய் முதலீடு என்ன ஆனது? அரசுக்கு அண்ணாமலை கேள்வி