முதல்வர் விளையாட்டு போட்டி 22,049 வீரர்,வீராங்கனை பதிவு

கரூர், கரூரில் நடக்கும் முதல்வர் விளையாட்டு போட்டிகளில், 22,049 வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கின்றனர்.


மாவட்ட அளவில், 25 வகையான விளையாட்டு போட்டிகளும், மண்டல அளவில், 7 வகையான போட்டிகளும், மாநில அளவில், 37 வகையான போட்டிகளும் நடக்கிறது. அந்த வகையில், கரூரில் மாவட்ட அளவில், 5 பிரிவுகளில் மொத்தமாக 53 வகையான போட்டி நடக்கிறது. பள்ளி பிரிவில், 7,763 மாணவ, மாணவியர், கல்லுாரி பிரிவில், 7,349 மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 243, அரசு பணியாளர் பிரிவில், 749 மற்றும் பொது பிரிவில், 5,945 ஆண்கள், பெண்கள் என மொத்தம், 22,049 பேர் இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ளனர்.
ஹாக்கி, சிலம்பம் உள்பட பல்வேறு போட்டிகள் நேற்று நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Advertisement