தக்காளி மகசூல் பாதிப்பு; விலை சரிவால் விவசாயிகள் அதிர்ச்சி

உடுமலை; உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், நடப்பு பருவத்தில், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை துவங்கியுள்ளது.
உடுமலை நகராட்சி சந்தை மற்றும் கிராமங்களிலுள்ள விற்பனை மையங்களுக்கு, தினமும், தலா, 14 கிலோ கொண்ட ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்துள்ளது. தக்காளி மகசூல் பெருமளவு குறைந்துள்ள நிலையில், விலையும் சரிவால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: தக்காளி சாகுபடிக்கு, ஏக்கருக்கு, ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. நாற்று நடவு செய்து, 55வது நாள் முதல், 50 நாட்களுக்கு, 1,500 பெட்டிகள் வரை மகசூல் இருக்கும்.
நடப்பு பருவத்தில், வெயில், மழை என சீதோஷ்ண நிலை மாற்றம், வைரஸ் நோய், ஊசி புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல் காரணமாக, மருந்து செலவு அதிகரித்ததோடு, மகசூலும், 80 சதவீதம் வரை குறைந்து, இரு பறிப்புகளில், 150 பெட்டி மட்டுமே கிடைத்து வருகிறது.
ஒரு பெட்டி, ரூ.750 வரை விற்று வந்த நிலையில், காய்களும் சிறிதாக மாறி, தற்போது, ரூ.200 முதல், 300 வரை மட்டுமே விற்று வருகிறது. நடப்பு பருவத்தில் தக்காளி சாகுபடி விவசாயிகளுக்கு பெரிய அளவிலான நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜாம், ஊறுகாய் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட தொழிற்சாலைகள் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தாததால், விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கும் நிலை உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
மேலும்
-
பெண் வக்கீலின் அந்தரங்க வீடியோ தமிழகத்தில் பரவுவது எப்படி? போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி
-
துபாய் முதலீடு என்ன ஆனது? அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
தேஜ கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும்; பாஜவுக்கு பெருகிய ஆதரவு; கருத்துக்கணிப்பில் தகவல்
-
அதிபராக பணியாற்றவும் தயார்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பளீச்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
'மனப்பாட கல்வி தேவையில்லை என்ற எண்ணம் தவறானது': தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பேச்சு