சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினருக்கு 20 ஆண்டு சிறை
ஊட்டி; நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள பகுதியில் வசிக்கும் தம்பதியின், 16 வயது சிறுமிக்கு, 30 வயதான உறவினர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
வேறொரு சிகிச்சைக்காக தம்பதியினர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி, 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து, 2020ம் ஆண்டு ஆக. 26ம் தேதி, சிறுமியின் உறவினரை கைது செய்தனர்.
இவ்வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.
மேலும்
-
பெண் வக்கீலின் அந்தரங்க வீடியோ தமிழகத்தில் பரவுவது எப்படி? போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி
-
துபாய் முதலீடு என்ன ஆனது? அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
தேஜ கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும்; பாஜவுக்கு பெருகிய ஆதரவு; கருத்துக்கணிப்பில் தகவல்
-
அதிபராக பணியாற்றவும் தயார்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பளீச்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
'மனப்பாட கல்வி தேவையில்லை என்ற எண்ணம் தவறானது': தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பேச்சு