காணியாளம்பட்டியில் உயர்வுக்கு படி முகாம்
கரூர், கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி முகாம் நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமைவகித்து பேசியதாவது:
கிராமப்புற மாணவர்கள், உயர்கல்வி படிப்பது என்பது மிகவும் அரிதாக இருந்தது. குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக, உயர்கல்வி பயிலா சூழ்நிலை இருந்தது. இந்த காலகட்டத்தில் கல்வித்துறையில், பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்பது மிகவும் எளிது.
ஆங்கில புத்தகங்கள், ஆங்கில செய்தித்தாள் மற்றும் இலக்கணங்கள் மூலம் எளிமையாகவும், விரைவாகவும் கற்றுக் கொள்ளலாம்.அரசு பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு புதுமை பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கல்லுாரி படிப்பிற்கு மாதம், 1,000 ரூபாய் பெறலாம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக உதவித்தொகையும், மாணவ மாணவியருக்கான இலவச தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வித்யா லட்சுமி போர்ட்டல் மூலம் பதிவு செய்து, கல்விக் கடன் பெறலாம். கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு அரசு கல்லுாரிகளில் தங்களின் பாடப்பிரிவுகளுக்கு ஏற்றாற்போல், பட்டப் படிப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, முதன்மை கல்வி அலுவலர் செல்வமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி, அரசு பாலிடெக்னி முதல்வர் லோகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பெண் வக்கீலின் அந்தரங்க வீடியோ தமிழகத்தில் பரவுவது எப்படி? போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி
-
துபாய் முதலீடு என்ன ஆனது? அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
தேஜ கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும்; பாஜவுக்கு பெருகிய ஆதரவு; கருத்துக்கணிப்பில் தகவல்
-
அதிபராக பணியாற்றவும் தயார்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பளீச்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
'மனப்பாட கல்வி தேவையில்லை என்ற எண்ணம் தவறானது': தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பேச்சு