கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர், கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், இன்று புகழூர் நகராட்சியில் வார்டு, 5, 14, 15க்கு ஆர்.எஸ்.ரோடு காந்தியார் மண்டபத்திலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில், நாகம்பள்ளி பஞ்., மலைக்கோவிலுார் ஈஸ்வரன் கோவில் மண்டபத்திலும், குளித்தலை வட்டாரத்தில், திம்மம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement