திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபரானார் சபாபதி தம்பிரான்

தஞ்சாவூர்; திருப்பனந்தாள் காசி மடத்தின், 22வது அதிபராக சபாபதி தம்பிரான், பீடம் ஏறும் வைபவம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் காசி மடத்தின், 21வது அதிபராக இருந்த முத்துக்குமார சுவாமி தம்பிரான், 95, கடந்த ஆக., 19ல் பரிபூரணமடைந்தார்.
இதையடுத்து, சபாபதி தம்பிரான், 34, நேற்று, 22வது அதிபராக பீடம் ஏறும் வைபவம் நடைபெற்றது. காசிமடத்தின், 22வது அதிபராக பொறுப்பேற்ற ஸ்ரீமத் சபாபதி தம்பிரானின் இயற்பெயர் கார்த்திக். பொறியியல் பட்டதாரியான இவர், 2021ல், காசி மடத்தின் ஸ்ரீ காரியமாக ஓராண்டும், இளவராக நான்கு ஆண்டும் பொறுப்பேற்றார்.
தருமை ஆதீனம், 27வது குரு மகா சன்னிதானம், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்றவர். சபாபதி தம்பிரானுக்கு புனித நீரால், தருமை தம்பிரான் கட்டளை சுவாமிகளால், அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு, 22வது அதிபராக அஷ்டலெட்மி கட்டில் ஞானபீடம் ஏறினார். பின், மாகேசுவர பூஜையும், 22வது அதிபரின் வீதியுலா, அஷ்டலெட்சுமி கட்டில் கொலு காட்சியளித்து, அருளாசி வழங்கினார்.
மேலும்
-
பெண் வக்கீலின் அந்தரங்க வீடியோ தமிழகத்தில் பரவுவது எப்படி? போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி
-
துபாய் முதலீடு என்ன ஆனது? அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
தேஜ கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும்; பாஜவுக்கு பெருகிய ஆதரவு; கருத்துக்கணிப்பில் தகவல்
-
அதிபராக பணியாற்றவும் தயார்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பளீச்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
'மனப்பாட கல்வி தேவையில்லை என்ற எண்ணம் தவறானது': தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பேச்சு