ரூ.8,700 கோடி 'க்ரோ' ஐ.பி.ஓ., ஒப்புதல் அளித்தது செபி

பெங்களூரு; ஆன்லைன் முதலீட்டு தளமான 'க்ரோ', புதிய பங்கு வெளியீடு வாயிலாக 8,700 கோடி ரூபாய் திரட்ட தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.

நிதி தொழில்நுட்ப நிறுவனமான 'க்ரோ'வின் தாய் நிறுவனம், 'பில்லியன்பிரைன்ஸ் கேரேஜ் வெஞ்சர்ஸ்' ஆகும். புதிய பங்கு வெளியீட்டுக்கான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை, கடந்த மே 26ம் தேதி, இந்நிறுவனம் செபியிடம் தாக்கல் செய்திருந்தது.

புதிய பங்குகள் மற்றும் நிறுவனர்கள் வசம் இருக்கும் பங்குகள் விற்பனை என்ற அடிப்படையில் ஐ.பி.ஓ., இருக்கும் என, நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. புதிய பங்கு வெளியீட்டுக்குப் பின், பில்லியன்பிரைன்ஸ் கேரேஜ் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு, 60,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement