பள்ளி விளையாட்டு விழா

மதுரை: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, மதுரை பெருங்குடி அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா பள்ளித் தாளாளர் ஜெயவீரபாண்டியன் தலைமையில் நடந்தது.

பள்ளி முதல்வர் ஜெயஷீலா, துணை முதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி முன்னிலை வகித்தனர். மதுரை அவனியாபுரம் போலீஸ் உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன், இசைக்குழு, சாரணர், சாரணியர், குருளையர் இயக்கம், நீலப்பறவை இயக்கம் மாணவர் குழுக்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின், கொடியேற்றி துவக்கி வைத்தார்.

மாணவர்களின் பரதநாட்டியம், உடற்பயிற்சி நடனம் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, நாடார் மேல்நிலைப் பள்ளியின் பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியரும், செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான நாகநாதன் பரிசு வழங்கினார். அனைத்துப் போட்டிகளிலும் அன்புக்குழுவினர் வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றனர்.

Advertisement