'கோவில் தொடர்பான தீர்ப்புகளை அறநிலையத்துறை மதிப்பதில்லை'

பெ.நா.பாளையம் : தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
கோவை மாவட்டம், துடியலுாரில், ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விசர்ஜன பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
இதில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஞ்சித், வாராகி மணிகண்ட சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தாலும், அவர்கள் சுதந்திரமாக தங்களுடைய பண்டிகைகளை கொண்டாட அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழா ஹிந்துக்கள் இடையே பிணைப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில் பெரும் சிக்கல்களை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
அதையெல்லாம் மீறி ஹிந்து முன்னணி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை வெற்றிகரமாக கொண்டாடி வருவதற்காக, நாம் நன்றி சொல்ல வேண்டும்.
தற்போது எவ்வளவு குதுாகலமாக விநாயகரை அந்தந்த பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் கரைக்கிறோமோ, அதே உற்சாகத்துடன் குறிப்பிட்ட ஏரி, குளத்தை துாய்மைப்படுத்தும் பணியில் ஒவ்வொரு இளைஞரும் ஈடுபட வேண்டும்.
தமிழகத்தில், கோவில்களில் இருந்து பெறப்பட்ட நகைகளை உருக்கி, ஹிந்து சமய அறநிலையத்துறை எங்கே வைத்திருக்கிறது; அதன் வாயிலாக எவ்வளவு வருமானம் வருகிறது; அந்த வருமானத்தை என்ன செய்தார்கள் என்பதற்கான பதில் இல்லை. ஒவ்வொரு கோவில்களிலும் ஆகம விதி மீறப் படுகிறது.
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, கோவில் சொத்துக்கள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு களை அறநிலையத் துறை மதிப்பதில்லை.
கடந்த 1986க்கு பின் கோவில் சொத்துக்களில் ஒரு லட்சம் ஏக்கர் இடத்தை இழந்திருக்கிறோம். இதை மனதில் கொண்டு வரும், 2026 சட்டசபை தேர்தலில் நல்லவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
-
விநாயகர் சிலைகள் விஜர்சனம் : நாளை போக்குவரத்து மாற்றம் புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம்
-
கைவினை பொருட்கள் கண்காட்சி
-
செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கல்
-
ஆலந்துறையீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா
-
ரூ.32 கோடி மதிப்பு நிலத்தை அரசுக்கு தானம் வழங்கிய பெண்!