'நிதி பற்றாக்குறை இலக்கில் 30% எட்டப்பட்டது'

புதுடில்லி; மத்திய அரசு கடந்த ஜூலை மாத நிலவரப்படி, மொத்த நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கில் 29.90 சதவீதத்தை எட்டியுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையாளர் தெரிவித்துள்ளார். இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 17.20 சதவீதமாக இருந்தது.

அரசின் செலவினம் மற்றும் வருவாய்க்கு இடையிலான இடைவெளி, நிதி பற்றாக்குறை எனப்படுகிறது. கடந்த ஜூலை நிலவரப்படி அரசின் மொத்த செலவினம் 15.63 லட்சம் கோடி ரூபாயாகவும்; மொத்த வருவாய் 10.95 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.

இதைத்தொடர்ந்து வர்த்தக பற்றாக்குறை 4.68 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

Advertisement