விளக்கு பூஜை

திருநகர்: திருநகர் ராணி மங்கம்மாள் சாலை மங்கள விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தி விழா ஆக. 23ல் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஆக. 26ல் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

நேற்று 108 மூலிகைகளால் அர்ச்சனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு விளக்கு பூஜை நடந்தது. இன்று மங்கள விநாயகர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சேமட்டான்குளம் கண்மாயில் கரைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement