மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடந்தது.
மதுரை நகரின் பல பகுதிகளில் ஹிந்து முன்னணி சார்பில் சிலைகள் வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று அந்த சிலைகள் அனைத்தும் கீழமாசி வீதிக்கு கொண்டு வரப்பட்டன.
மாலை 5:00 மணிக்கு ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
மேள தாளங்கள் முழங்க பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் என கிராமிய கலைகளுடன் 10 அடி வரையான 300 க்கும் மேற்பட்ட அலங்கார வண்டிகளில் அணிவகுத்தன. இறுதியில் வைகையாற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப் பட்டன.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்டத் தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, ராஜசிம்மன், சிவலிங்கம், ஹிந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் செல்வகுமார், கோட்டச் செயலாளர் அரசுபாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.
கமிஷனர் லோகநாதன் தலைமையில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று விளாச்சேரி நான்குகரை குலாளர்கள் சார்பில் களிமண் விநாயகர் சிலை வழங்கப்பட்டது.
அந்த களிமண் சிலை மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர் முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது.
அந்த சிலையை நேற்று பல்லக்கில் மேளதாளங்கள் முழங்க
எடுத்துச் சென்று, சரவணப் பொய்கையில் கரைத்த
னர்.
உசிலம்பட்டி:
நகரில் 20 இடங்களில் வைத்திருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று, மாதரை, நல்லுத்தேவன்பட்டி கண்மாய்களில் கரைத்தனர். கிராமப்பகுதிகளில்
வைத்திருந்த சிலைகளை போலீசார், அரசு
அதிகாரிகள் வழிகாட்டுதல் படி அந்தந்தப்பகுதி நீர்நிலைகளில் கரைத்தனர்.
திருமங்கலம்:
உசிலம்பட்டி ரோடு, சந்தைப்பேட்டை, குதிரை சாரி குளம், செங்குளம், வையம்பட்டி, மறவன் குளம், சித்தாலை, கிழவனேரி, பச்சக்கோப்பன்பட்டி, செங்கப்படை பகுதிகளில் 7 அடி
உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று கக்கன் காலனி அருகே காளியம்மன் கோயில் பகுதிக்கு அனைத்து விநாயகர் சிலைகளும் கொண்டு வரப்பட்டன. சிறப்பு பூஜை செய்து மாலை 5:00 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது.
உசிலம்பட்டி ரோடு சந்திப்பு பகுதியில் தற்காலிகமாக ஏற்பாடு செய்திருந்த தண்ணீர் தொட்டியில் சிலைகள் கரை
க்கப்பட்டன.
ஏ.எஸ்.பி., அன்சுல்நாகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும்
-
மின்துறை தனியார்மயத்தை கண்டித்து இண்டியா கூட்டணி தொடர் போராட்டம்; மாஜி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
-
காரைக்காலில் விநாயகர் சிலை ஊர்வலம்; சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன் பங்கேற்பு
-
ஹோண்டா மோட்டார் சைக்கிள் அறிமுகம்
-
சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
-
விநாயகர் சிலைகள் விஜர்சனம் : நாளை போக்குவரத்து மாற்றம் புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம்
-
கைவினை பொருட்கள் கண்காட்சி