காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

செஞ்சி : காமாட்சியம்மன் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் புதிதாக விநாயகர், முருகர், காமாட்சியம்மன் கோவில் கட்டி உள்ளனர்.
இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக யாகம், கோபூஜை, மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை மற்றும் அஷ்டபந்தனம் சாற்றுதல், விக்ரகங்களுக்கு கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு சூரிய, சந்திர வழிபாடு, நாடி சந்தானம், இரண்டாம் கால யாகசாலை பூஜை, அஸ்திர ஹோமம், 8:00 மணிக்கு தம்பதி பூஜை, 9:00 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், யாக்ரா தானமும், 9:40 மணிக்கு கடம் புறப்பாடும் 10:05 மணிக்கு கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலவர் மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.