காலவரையற்ற உண்ணாவிரதம்

திண்டுக்கல்: தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்குரிய கல்விக்கான தொகை ரூ.2ஆயிரத்து 401கோடி தருவோம் என தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்., கமிட்டி சார்பில், தாடிக்கொம்பு சாலையில் உள்ள காங்., கட்சி அலுவலகமான நேரு பவனில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கியது.

மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்து பேசினார். இதில் நிர்வாகிகள், காஜா மைதீன், பரமன், தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement