மருத்துவ கருத்தரங்கம்

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் மருத்துவமனையின் அங்கீகார தரவு மேலாண்மை அமைப்பு சார்பில், மருத்துவர்களுக்கான அடிப்படை தனிப்பட்ட நிதி திட்டமிடல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு வெங்கடேஸ்வரா பல் மருத்து கல்லுாரி டாக்டர் முரளி தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா, மருத்துவ கல்லுாரியின் இயக்குனர் ரத்தினசாமி முன்னிலை வகித்தனர். மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப்ராஜ் வரவேற்றார்.

அங்கீகார தரவு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் லதா, டாக்டர்கள் ஷபானாபாத்திமா, மல்லிகா, நாகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement