ஆன்சன் கோல்டு லோன் நிறுவன கிளைகள் திறப்பு விழா

தேனி: ஆன்சன் நிதி நிறுவனத்தின் தங்க நகை கடன் வழங்கும் சின்னமனுார், பெரியகுளம் கிளைகள் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.

இந்நிறுவனத்தின் 51வது கிளை திறப்பு விழா சின்னமனுாரில் நடந்தது. இயக்குநர் தாமோதரன் குத்து விளக்கேற்றி தலைமை வகித்தார்.

சின்னமனுார் வர்த்தக சங்கத்தின் நிறுவன தலைவர் துர்கா வஜ்ரவேல், லஞ்ச் ஹோம் உரிமையாளர் பெருமாள், ஆன்சன் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் சோனி மேத்யூ, செயல் இயக்குநர் பிரதீப் உள்ளிட்டோர் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

நிறுவனத்தின் 52 வது கிளை திறப்பு விழா பெரியகுளத்தில் நடந்தது. பெரியகுளம் நகர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மணிவண்ணன் திறந்து வைத்தார். சங்கச் செயலாளர் ராஜவேல், பொருளாளர் விஜயகுமார், அரசு உதவி பெறும் கல்வி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரை வேணு கோபால், பொறியாளர் நெளசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிறுவன நிர்வாக இயக்குநர் தாமோதரன் கூறியதாவது: மாவட்டத்தில் சின்னமனுார், பெரியகுளம் பகுதியில் மக்களின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் விதமாக எளிய முறையில் நகை அடகு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

நிறுவனம் அரசு விதிகளுக்கு உட்பட்டு தேவைகளை பூர்த்தி செய்கிறது., என்றார்.

Advertisement