வாகனங்களுக்கான பேன்சி எண் ஏல முறையில் ஒதுக்கீடு; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.


தமிழகத்தில் இரு சக்கர வாகனம், கார், வேன், ஜீப், லாரி போன்ற வாகனங்களுக்கு, ஆர்.டி.ஓ., அலுவலகம் மூலம் பதிவு எண் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட எண்ணை வாங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.


தற்போது, வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து புதிய வரைவு விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நடைமுறை ஏற்கனவே கேரளா, புதுச்சேரியில் நடைமுறையில் இருக்கிறது. அதிக தேவை உள்ள நம்பர்களுக்கு e-bidding எனப்படும் ஆன்லைன் முறையில் ஏலம் விடப்படும். இதனால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும். இதனால் பேன்சி நம்பர் வாங்குவதற்கு நீடிக்கும் குழப்பம் நீங்கும்.

புதிய உத்தரவுகள் என்ன?



* பேன்சி நம்பர் வாங்குவதற்கு இருந்த நிலையான கட்டணம் மாற்றப்படுகிறது. இனி ஏலம் முறையில் அதிக விலை கொடுப்பவர்களுக்கு ஏலம் கிடைக்கும்.



* இதற்கான நுழைவு கட்டணம் ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.


* https://fancy.parivahan.gov.in என்ற இணையதளத்தில் அப்ளே செய்து பேன்சி எண்களை தேர்வு செய்ய வேண்டும்.


* ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் 48 மணி நேரத்திற்குள் பணத்தை கட்ட வேண்டும்.


* 30 நாட்களுக்கு வாகனத்தை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கொண்டு வந்து பதிவு செய்யவில்லை என்றால், அந்த நம்பர் ரத்து செய்யப்பட்டு பொது ஏலத்திற்கு விடப்படும்.


* இந்த புதிய விதி ஆகஸ்ட் 18ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Advertisement