வடக்கு மண்டல அணி முன்னிலை: அங்கித், யாஷ் துல் சதம்

பெங்களூரு: கேப்டன் அங்கித், யாஷ் துல் சதம் விளாச வடக்கு மண்டல அணி வலுவான முன்னிலை பெற்றது.

பெங்களூருவில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் தொடருக்கான காலிறுதியில் வடக்கு, கிழக்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் வடக்கு மண்டலம் 405, கிழக்கு மண்டலம் 230 ரன் எடுத்தன.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் வடக்கு மண்டல அணிக்கு கேப்டன் அங்கித் குமார், யாஷ் துல், சதம் கடந்து கைகொடுத்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 240 ரன் சேர்த்த போது யாஷ் (133) அவுட்டானார். ஆட்டநேர முடிவில் வடக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 388/2 ரன் எடுத்து, 563 ரன் முன்னிலை பெற்றிருந்தது. அங்கித் (168), ஆயுஷ் படோனி (56) அவுட்டாகாமல் இருந்தனர்.

சுபம் சதம்
மற்றொரு காலிறுதியில் மத்திய, வடகிழக்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் மத்திய மண்டலம் 532/4 ('டிக்ளேர்'), வடகிழக்கு மண்டலம் 185 ரன் எடுத்தன. பின் 2வது இன்னிங்சில் சுபம் சர்மா (122), யாஷ் ரத்தோடு (78), கேப்டன் ரஜத் படிதர் (66) கைகொடுக்க, மத்திய மண்டல அணி 331/7 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. வடகிழக்கு மண்டல அணியின் வெற்றிக்கு 679 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement