சாத்விக்-சிராக் அபாரம்: உலக பாட்மின்டனில் பதக்கம்

பாரிஸ்: உலக பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி பதக்கத்தை உறுதி செய்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய் யிக் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, 2வது செட்டை 21-19 என வென்றது.
மொத்தம் 43 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி 21-12, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இதன்மூலம் பதக்கத்தை உறுதி செய்தது. ஏற்கனவே இந்த ஜோடி, 2022ல் வெண்கலம் வென்றிருந்தது. உலக பாட்மின்டன் அரங்கில் இந்தியாவுக்கு இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 9 வெண்கலம் என, 14 பதக்கம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் காலிறுதியில் மலேசிய ஜோடியிடம் கண்ட தோல்விக்கு நேற்று, இந்திய ஜோடி பதிலடி கொடுத்தது.
மேலும்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்: லாரி -கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
-
மோடியுடன் கருத்து வேறுபாடு: மோகன் பகவத் வெளிப்படை
-
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஓய்வூதியர் மாநாட்டில் வலியுறுத்தல்
-
இலவச மருத்துவ முகாம்
-
சுகுணா கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்
-
சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டி கே.எப்.சி.சி., அணி வெற்றி