ஜப்பான் பிரதமர் இஷிபாவுக்கு பிரதமர் மோடியின் பரிசு: சுவாரஸ்ய தகவல் இதோ!

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கும், அவரது மனைவி யோஷிகோ இஷிபாவுக்கு பிரதமர் மோடி கண்கவர் நினைவு பரிசுகளை வழங்கி உள்ளார்.
@1brஜப்பான் பயணத்தை நிறைவு செய்துவிட்டு பிரதமர் மோடி சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். ஜப்பானிய அரசு மற்றும் மக்களின் அன்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த பயணம் இரு நாடுகளின் உறவில் ஏற்படுத்திய நன்மைகளுக்காக என்றென்றும் நினைவு கூரப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜப்பான் பயணத்தில் பிரதமர் மோடி அளித்த பரிசுகள் விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரம் பின்வருமாறு: ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு பிரதமர் மோடி சாப்ஸ்டிக்ஸுடன் கூடிய ராமன் கிண்ணங்கள் வழங்கினார்.
* இந்த கிண்ணம் வெள்ளி சாப்ஸ்டிக்ஸுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
* இது இந்திய கலைத்திறன் பிரதிபலிக்கிறது.
* ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பெறப்பட்ட நிலவுக்கல் கிண்ணத்தில் இடம் பெற்றுள்ளது.
பிரதமர் மனைவிக்கு பரிசு
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் மனைவி யோஷிகோ இஷிபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாஷ்மினா சால்வை ஒன்றை வழங்கி உள்ளார்.
* லடாக்கில் உள்ள சாங்தாங்கி ஆட்டின் மெல்லிய கம்பளியால் இந்த சால்வை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
* இந்த சால்வை லேசானது, மென்மையானது. இது காஷ்மீர் கைவினைஞர்களால் கையால் நெய்யப்பட்டது. அழகிய தீப்பெட்டி வடிவ பெட்டியில் வைத்து இந்த சால்வை பரிசாக வழங்கப்படுகிறது.
* பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
* இந்த சால்வை காஷ்மீர் கைவினை கலைஞர்களின் திறனை உலகிற்கு எடுத்துரைக்கிறது.
வாசகர் கருத்து (3)
Barakat Ali - Medan,இந்தியா
30 ஆக்,2025 - 16:46 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
30 ஆக்,2025 - 15:44 Report Abuse

0
0
SANKAR - ,
30 ஆக்,2025 - 17:07Report Abuse

0
0
Reply
மேலும்
-
வடக்கு மண்டல அணி முன்னிலை: அங்கித், யாஷ் துல் சதம்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
நான்காவது சுற்றில் ஜோகோவிச்: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
-
சாத்விக்-சிராக் அபாரம்: உலக பாட்மின்டனில் பதக்கம்
-
முன்னாள் எம்எல்ஏவுக்கான பென்ஷனுக்கு விண்ணப்பித்த ஜக்தீப் தன்கர்
-
வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி நகரும் இந்தியா; சிவராஜ்சிங் சவுகான்
Advertisement
Advertisement