மூப்பனார் நினைவு நாள் விழா; அன்னதானம்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தினர்.
சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா
சீதாராமன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னாள் எம்எல்ஏ
கோபால்சாமி உள்ளிட்ட பாஜ பிரமுகர்கள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினர்
ஜி கே எம் அரிமா சங்கம் சார்பாக கோபாலபுரம் எஸ் ஆர் கே ஸ்டில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட மூப்பனாரின் உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி. ஆர்.வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் சென்னை நந்து, ஜி கே எம் அரிமா சங்க தலைவர் ரகு நிர்வாகிகள் எம்.எஸ்.வெங்கடேஷ்,மோகனசுந்தரம்,பார்த்தசாரதி, சரவணன், சகாயராஜ் ரவி, ஆர்.நாகராஜன், ராஜ செல்வா, வி. சீனிவாசன் அமல்ராஜ்,எஸ் ஆர் கே ஸ்டில் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர் .

மேலும்
-
வடக்கு மண்டல அணி முன்னிலை: அங்கித், யாஷ் துல் சதம்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
நான்காவது சுற்றில் ஜோகோவிச்: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
-
சாத்விக்-சிராக் அபாரம்: உலக பாட்மின்டனில் பதக்கம்
-
முன்னாள் எம்எல்ஏவுக்கான பென்ஷனுக்கு விண்ணப்பித்த ஜக்தீப் தன்கர்
-
வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி நகரும் இந்தியா; சிவராஜ்சிங் சவுகான்