இலவச மருத்துவ முகாம்

கடலுார் : சிறுவாச்சூர், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் விடியல் சமூக அமைப்பு சார்பில், சேத்தியாதோப்பில் இலவச முழுஉடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

விடியல் சமூக அமைப்பின் கவுரவ தலைவர் இளஞ்செழியன் மற்றும் முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம் முகாமை துவக்கி வைத்தனர்.முகாமில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் பொது மருத்துவம், இதயம், சிறுநீரகவியல், எலும்பியல், குடல் மற்றும் கல்லீரல்,புற்றுநோய், பல் மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்கள் குழு பங்கேற்று பொதுமக்களை பரிசோதித்து, ஆலோசனை வழங்கினர்.

முகாமில் பங்கேற்றபொதுமக்களுக்கு இ.சி.ஜி., எக்கோ, ஸ்கேன் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

புற்றுநோய் அறிகுறிகளுடன் வந்த நோயாளிகளுக்கு, புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளை 50சதவீத சலுகையில்மருத்துவமனையில் மேற்கொள்ளலாம். புற்றுநோய் உறுதி செய்யப்பட்டால் அதற்கான மருந்துகள் 20சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படும் எனடாக்டர்கள் தெரிவித்தனர்.

முகாமில் பரிசோதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்உள்நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை, உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம்தெரிவித்துள்ளது. முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

Advertisement