ஐயப்பன் மாநாட்டுக்கு சர்ச்சைக்குரிய பெண்ணுக்கு அழைப்பா? அமைச்சர் கொடுத்த விளக்கம்

திருவனந்தபுரம்: உலக ஐயப்பன் சங்கமம் மாநாட்டுக்கு சர்ச்சைக்குரிய பெண்ணாக பார்க்கப்படும் பிந்து அம்மணி க்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் வாசவன் விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்த மாதம் 20ல் கேரளாவின் பம்பையில் உலக அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைக்கிறார். 'இந்த விழாவில் பங்கேற்க அண்டை மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் உள்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், 2019ம் ஆண்டு சபரிமலைக்கு அத்துமீறி நுழைந்த பிந்து அம்மணி என்ற பெண்ணும், உலக ஐயப்பன் சங்கமம் மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்குமாறு கேரள அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இது குறித்து தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் கூறுகையில், "மாநில அரசுடன் இணைந்து திருவனந்தபுரம் தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் அவரை (பிந்து அம்மணி) அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு வகையிலும் அவர் ஐயப்பா சங்கமத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்," என்றார்.

Advertisement