தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஓய்வூதியர் மாநாட்டில் வலியுறுத்தல்

கோவை : தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 5வது மாநில மாநாடு, கோவை தாமஸ் கிளப் அரங்கில் நேற்று நடந்தது.

கோவை மாவட்ட தலைவர் மதன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் அங்கநாதன், மாநாட்டை துவக்கி வைத்தார்.

'பார்லிமென்டில் 2025ல் நிறைவேற்றிய ஓய்வூதிய மசோதாவை, திரும்பப் பெற வேண்டும், 2021- தேர்தல் காலத்தில் தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட நிர்வாகிகள் ஜானகி, சாந்தாமணி, அருணகிரி, நடராஜன் மற்றும் 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisement