மோடியுடன் கருத்து வேறுபாடு: மோகன் பகவத் வெளிப்படை

'பிரதமர் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்திற்கும் இடையே உறவு சரியில்லை. அதனால்தான், வயதிற்கு மேற்பட்ட தலைவர்கள், அரசி யலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என, பக்வத் சொன்னார்' என்று, டில்லி அரசி யல் வட்டாரங்களில் 75 இந்த உறவு குறித்து பேசப்பட்டது.
'இருவருக்கும் இடையே உள்ள விரி சல்தான், பா.ஜ.,வின் தேசிய தலைவரை நியமிப்பதிலும் பிரச் னையை உண்டாக்கி உள்ளது. அதனால் தான், இதுவரை தலைவர் நியமிக்கப்பட வில்லை' என, சொல்லப்பட்டது.
சமீபத்தில் மீடியாவை சந்தித்த பகவத், 'எனக்கும், மோடிக்கும் சண்டை எதுவும் கிடையாது; ஆனால், கருத்து வேறுபாடுகள் உண்டு. இருவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டும்' என, கூறினார். மோடி என சொல்லாமல், இரண்டு அமைப்புகள் என, பேசி உள்ளார் பகவத்.
'அதே போல, 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என நான் சொல்லவில்லை; ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சீனியர் ஒருவர் கிண்டலாக பேசியதைத் தான் சொன்னேன்' என்றும் கூறினார்.
'இதிலிருந்து இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டது. ஆர்.எஸ்.எஸ்., தான் பா.ஜ., தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என்றால், இத்தனை தாமதம் ஏற்பட்டிருக்காது' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மோடி- பகவத் இடை யே உள்ள வேறுபாடு தொடர்வது அரசுக்கு நல்ல தல்ல என, சில பா.ஜ., மற்றும் ஆர்.எஸ். எஸ்., சீனியர்கள் பகவத்திடம் கூறினராம். பகவத் இடையே உள்ள அதனால்தான் மீடியாவை சந்தித்து, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் தன் நிலையை விளக்கியுள்ளார்' என்கின்றனர், பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர்கள்.













மேலும்
-
மணிமொழி
-
வரி இல்லாவிட்டால் அமெரிக்கா அழிக்கப்படும்: மீண்டும் புலம்புகிறார் அதிபர் டிரம்ப்
-
ஐயப்பன் மாநாட்டுக்கு சர்ச்சைக்குரிய பெண்ணுக்கு அழைப்பா? அமைச்சர் கொடுத்த விளக்கம்
-
பொறுப்பு டி.ஜி.பி., பதவியேற்பில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 'ஆப்சென்ட்'
-
நம்ப வைத்து முதுகில் குத்திய பழனிசாமி பிரேமலதா கொந்தளிப்பு
-
குன்னுார் அருகே வீட்டில் தீ மாற்றுத்திறனாளி கருகி பலி