தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.680 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.77,640

1


சென்னை: சென்னையில் இன்று (செப் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை ஆகிறது.


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து, 9,620 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 76,960 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.


நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (செப் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77 640க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.78 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement