ஷாங்காய் மாநாட்டில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான்; மாஸ் காட்டிய இந்தியா

19

தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் நெருக்கம் காட்டி வந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனித்து விடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


@1brபஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. அதன்பிறகு, பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலும் துண்டித்துக் கொண்டது. இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்திற்கு காரணமே நான் தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.


மேலும், ரஷ்யாவுடன் எண்ணெய் பொருட்களை வாங்குவதைக் கண்டித்து இந்தியாவுக்கு 50 சதவீத கூடுதல் வரியையும் அதிபர் டிரம்ப் விதித்தார். மேலும், இந்தியாவை வெறுப்பேற்றும் விதமாக, அமெரிக்கா - பாகிஸ்தான் நாடுகள் உறவை மீண்டும் புதுப்பித்துக் கொண்டன.

இதனிடையே, சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடினுடன் நெருக்கம் காட்டினார். அதேபோல, இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதற்கு சீன, ரஷ்யா நாடுகளும் விரும்பின.

இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கும் அரங்கில், பிரதமர் மோடியுடன் அனைத்து நாடுகளின் தலைவர்களும் மிகவும் ஆர்வத்துடன் பேசினர். ரஷ்ய அதிபர் புடினும் பிரதமர் மோடியை ஆரத்தழுவி, இந்தியாவுடன் இணைந்து செயல்பட ரஷ்யா விரும்புவதை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து, பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் மும்முரமாக பேசிக் கொண்டே நடந்து சென்ற போது, அருகே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தனித்து விட்டதைப் போல நின்று கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement