வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: முதல்வரை சாடிய நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: ''அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேஜ கூட்டணியில் தான் தொடர்ந்து இருக்கிறார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
வெள்ளை அறிக்கை எங்கே?
முதல்வர் ஸ்டாலின், பல லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று இருப்பதாக கூறுகிறார். இதற்கு முன்பும் அவர் அமெரிக்கா, ஐரோப்பா எனப் பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.
அப்போது, அந்தப் பயணங்கள் மூலம் வந்த முதலீடுகள் எவ்வளவு, போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன்.
ஆனால் அந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. இப்போதும் அவர் வெளிநாடு சென்றிருக்கிறார். வழக்கம் போலவே, இந்த முறையும் அவர் எந்த முதலீட்டையும் கொண்டு வராமல் சும்மாதான் திரும்பி வருவார்.
பொறுப்பு டிஜிபி
தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி நியமனம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதுகுறித்து நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

















மேலும்
-
ஜார்க்கண்டில் நக்சலைட்கள் உடன் துப்பாக்கிச்சண்டை: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்
-
ராக்கெட் வேகத்தில் எகிறுது... ஆமை வேகத்தில் குறையுது; தங்கம் விலை இன்றைய நிலவரம்
-
சாத்துாரில் பட்டாசு ஆலை வெடி விபத்து: அறை சேதம்
-
அப்பாவி மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகமா?
-
எச்.பி.சி.எல். கட்டுப்பாடுகள் எதிர்த்து டேங்கர் லாரி டிரைவர்கள் 'ஸ்டிரைக்'
-
உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? மக்களை அடித்து விரட்டுவதற்கா? கொந்தளித்தார் அன்புமணி