பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவாலாக உள்ளது: ஷாங்காய் அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

4

பீஜிங்: ''நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதுகாப்பு, அமைதி முக்கியம். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவாலாக உள்ளது'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சீனாவில் ஷாங்காய் அமைப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: ஷாங்காய் அமைப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவேற்பு அளித்த சீன அதிபருக்கு நன்றி. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா சாதகமான பங்கு வகித்து வருகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதுகாப்பு, அமைதி முக்கியம். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவாலாக உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் எஸ்சிஓ என்பது, எஸ்-பாதுகாப்பு, சி-இணைப்பு, ஓ-வாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.

நட்பு நாடுகளுக்கு…!



அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது. பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையை இந்தியா வலியுறுத்துக்கிறது. குரல் கொடுக்கிறது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News

@quote@இந்தியா நான்கு தசாப்தங்களாக பயங்கரவாத தாக்கத்தைச் சுமந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்த போது இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த நட்பு நாடுகளுக்கு நன்றி. quoteஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், பாதுகாப்பும், அமைதியும், நிலைத்தன்மையும் அவசியம்.

பயங்கரவாதம்



ஆனால் பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது.
பயங்கரவாதம் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கே ஆபத்து.
@quote@பாதுகாப்பு, அமைதி ஸ்திரத்தன்மையே ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக் காரணம். இந்த பாதையில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. quoteஇதனால் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமையை இந்தியா வலியுறுத்துகிறது.

முன்னேற்றம்





பஹல்காமில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. சில நாடுகள் வெளிப்படையாக பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பயங்கரவாதத்தில் எந்த சமரசமும் இருக்க முடியாது. பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது.
நாம் அதை எல்லா வடிவங்களிலும் கண்டிக்க வேண்டும். இன்று இந்தியா சீர்திருத்தம், செயல்திறன் ஆகியவற்றை பின்பற்றி முன்னேறி வருகிறது.

வாழ்த்துக்கள்



இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாக மாற்ற நாங்கள் முயற்சி செய்துள்ளோம். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வளர்ச்சி அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. போதைப்பொருள் கடத்தல், சைபர் பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். இன்று உஸ்பெகிஸ்தானின் சுதந்திர தினம், நான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement