ஆவணம் ஒப்படைப்பு போராட்டம்
திண்டுக்கல் : அய்யலூர் பகுதியில் உள்ள காப்புக்காடுகளின் அருகில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வனத்துறையினர் செயல்படுகின்றனர். அப்பகுதியில் தேவாங்குகள் சரணாலயம் அமைக்க இருப்பதாக கூறி மலைவாழ் மக்களுக்கு பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தும் வனத்துறையினரை தடுக்க கோரி தமிழர் தேசம் கட்சி சார்பில் குடியுரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு போராட்டம் நடந்தது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இதற்கு மாநில அமைப்பு செயலாளர் மகிடேஸ்வரன் தலைமை வகித்தார். அய்யலுாரை அடுத்த பஞ்சதங்கி புதுார், காக்கயம்பட்டி கோம்பை உள்ளிட்ட கிராம மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டெண்டர் முறைகேடு வழக்கு: வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு
-
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வங்கிச்சேவை; சிறப்பு முயற்சி மேற்கொள்ள ஜனாதிபதி வலியுறுத்தல்
-
சினிமாவை அச்சுறுத்தும் சமூக வலைத்தள கொள்ளையர்கள்: ஐஎப்டிபிசி காட்டம்
-
சந்திரசேகர ராவ் மகள் பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
-
பாலியல் வழக்கில் கைதான ஆம்ஆத்மி எம்எல்ஏ: போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓட்டம்
-
எனது தாயை அவமதித்துவிட்டனர்: பிரதமர் மோடி வேதனை
Advertisement
Advertisement