பாலியல் வழக்கில் கைதான ஆம்ஆத்மி எம்எல்ஏ: போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓட்டம்

சண்டிகர்: பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில், கைதான ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் பதன்மஜ்ரா போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார்.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஆம்ஆத்மி கட்சியில் எம்எல்ஏவாக இருப்பவர் ஹர்மித் சிங் பதன்மஜ்ரா. இவர் கடந்த சட்டசபை தேர்தலில் சானோர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மீது ஜிரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
இதையடுத்து, ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மித் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (செப் 02) காலையில் அவரை போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றனர். கைது செய்து போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து செல்லப்பட்ட ஹர்மீத் பதன்மஜ்ராவும், அவரது உதவியாளர்களும் போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு இரு கார்களில் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய ஆம்ஆம்மி எம்எல்ஏ ஹர்மித் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.





மேலும்
-
இந்திய அணி வெற்றி தொடருமா... * இன்று தென் கொரியாவுடன் பலப்பரீட்சை
-
131 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து * தென் ஆப்ரிக்கா கலக்கல் வெற்றி
-
யு.எஸ்., ஓபன்: காலிறுதியில் சின்னர் * கோகோ காப் அதிர்ச்சி
-
மிட்சல் ஸ்டார்க் ஓய்வு * சர்வதேச 'டி-20' போட்டியில்...
-
வலுவான நிலையில் தமிழகம்
-
8 பந்தில் 7 சிக்சர் * போலார்டு விளாசல்