கவனம் ஈர்த்த மும்மூர்த்திகள்!

தியான்ஜின்: பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியுடன், ரஷ்ய அதிபர், சீன அதிபர் நெருக்கம் காட்டி உரையாடி மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சிகள் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனாவின் தியான்ஜின் நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் சீனா, ரஷ்யா உட்பட 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பார்வையாளர்களாக உள்ள நாடுகளின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மா நாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியுடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர் ஆரம்பம் முதலே நெருக்கம் காட்டி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் ஒன்றாக பேசி மகிழ்ந்து, கட்டியணைத்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா எச்சரித்து, இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தது. அந்த சமயம் ரஷ்யா -மற்றும் இந்தியா ஒன்றையொன்று விட்டுக் கொடுக்காமல் ஒத்துழைப்பை அளித்தன.
இதேபோன்று சீனாவும் எல்லை பிரச்னையை பேசித் தீர்த்து, இந்தியாவுடன் ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொண்டது.
இந்த நிலையில் ஷாங்காய் உச்சி மாநாட்டில், மூன்று நாட்டு தலைவர்களின் செயல்பாடும், தாங்கள் போட்டியாளர்கள் அல்ல வளர்ச்சிக்கான ப ங்காளிகள் என்பதை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்தது.






















மேலும்
-
டெண்டர் முறைகேடு வழக்கு: வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு
-
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வங்கிச்சேவை; சிறப்பு முயற்சி மேற்கொள்ள ஜனாதிபதி வலியுறுத்தல்
-
சினிமாவை அச்சுறுத்தும் சமூக வலைத்தள கொள்ளையர்கள்: ஐஎப்டிபிசி காட்டம்
-
சந்திரசேகர ராவ் மகள் பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
-
பாலியல் வழக்கில் கைதான ஆம்ஆத்மி எம்எல்ஏ: போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓட்டம்
-
எனது தாயை அவமதித்துவிட்டனர்: பிரதமர் மோடி வேதனை