தரங்கம்பாடியில் மீனவர்கள் போராட்டம்

மயிலாடுதுறை: தடை செய்யப்பட்ட அதிவேக விசைப்படகு, வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி மற்றும் வானகிரியில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 கடலோர மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மீனவர்கள் 400 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கொண்டு கடலில் மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இதில் பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட சில கிராம மீனவர்கள் அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமையிலான 26 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று தரங்கம்பாடி மற்றும் வானகிரி ஆகிய இரு கிராமங்களில் கருப்பு கொடி கட்டி கடலில் இறங்கி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன்வளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சு நடத்த முன் வராததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், அரசு அதிகாரிகளை கண்டித்தும் சிதம்பரம்- காரைக்கால் நெடுஞ்சாலையில் தரங்கம்பாடி கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, உதவி இயக்குனர் மோகன் குமார், டிஎஸ்பி அண்ணாதுரை, தாசில்தார் சதீஷ் மற்றும் போலீசார் பேச்சு நடத்த வந்தனர். ஆனால் மீனவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்றடைந்தார் கிம் ஜோங் உன்
-
இந்தியா எங்களை தடுக்கிறது: அஜர்பைஜான் அபாண்டம்
-
ஜூனியர் அதிகாரியுடன் ரகசிய உறவு: நெஸ்லே தலைமை நிர்வாக அதிகாரி பணி நீக்கம்
-
அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பு; அவசர கால நிவாரணம் வழங்க ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்
-
காய்ச்சல் பரவல் எதிரொலி: முகக்கவசம் அணிய அறிவுரை
-
வெள்ள நீரை சேமித்து வையுங்கள்: பாகிஸ்தான் அமைச்சரின் புது ஐடியா