ஜூனியர் அதிகாரியுடன் ரகசிய உறவு: நெஸ்லே தலைமை நிர்வாக அதிகாரி பணி நீக்கம்

ப்ளும்பெர்க்:உலகப்புகழ் பெற்ற சுவிஸ் உணவு நிறுவனமான நெஸ்லே, தலைமை நிர்வாக அதிகாரி லாரன்ட் ப்ரீக்ஸ், நடத்தை விதிகளை மீறியதால் அதிரடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெஸ்லே நிறுவனத்தில் லாரன்ட் ப்ரீக்ஸ் 1986 ஆம் ஆண்டு முதல் பணியில் இருந்து வந்தார். மேலும் அவர் பல்வேறு பதவிகளை வகித்துவந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் நெஸ்லே நிறுவனம், தனது நிர்வாக அமைப்பை மறுசீரமைத்தபோது, லாரன்ட் ப்ரீக்ஸ், லத்தீன் அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2024 ல் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த மார்க் ஷ்னைடருக்கு பதிலாக செப்டம்பர் 1, 2024 அன்று அவர் அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், லாரன்ட் ப்ரீக்ஸ்க்கும் ஜூனியர் அதிகாரியுடன் ரகசிய உறவு இருந்த நிலையில், நெஸ்லே இயக்குனர்கள் குழு, உடனடியாக இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணையில் முடிவில் நடத்தை விதிகள் மீறப்பட்டது உறுதியானது. இதனையடுத்து அவர் நேற்று அதிரடியாக சிஇஓ பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இது குறித்து நெஸ்லே நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
லாரன்ட் ப்ரீக்ஸ் கடந்த ஒரு வருடமாக நெஸ்லேவின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இந்த திடீர் பணிநீக்கத்தைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக நீண்டகாலமாக நெஸ்லேவில் பணியாற்றி வரும் பிலிப் நவ்ரட்டில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
இது ஒரு அவசியமான முடிவு. நெஸ்லேவின் மதிப்புகள் மற்றும் நிர்வாகம் எங்கள் நிறுவனத்தின் வலுவான அடித்தளமாகும். அவற்றை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
களியாம்பூண்டி ஊராட்சி முகாமில் மயங்கிய முதியவருக்கு சிகிச்சை
-
சேறும், சகதியுமான வழித்தடம் பொதுமக்கள் கடும் அவதி
-
கூட்டுறவு நகர வங்கி பேரவை கூட்டம்
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு சந்திர கிரகணம்- விழிப்புணர்வு
-
நிலத்தடி குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்
-
நீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற தீயணைப்புத்துறை செயல்விளக்கம்