குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்றடைந்தார் கிம் ஜோங் உன்

பீஜிங்: சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன், குண்டு துளைக்காத ரயில் மூலம் அந்நாட்டுக்கு சென்றடைந்தார்.
அணுஆயுதம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் அதிபராக 2011ம் ஆண்டு முதல் கிம்ஜாங் உன் உள்ளார். சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா.வின் எதிர்ப்பை மீறி அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு சவால் விடுத்து வருகிறார்.
பல ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்தாலும், சீனா, ரஷ்யா தவிர வேறு நாடுகளுக்கு இவர் சென்றதில்லை. 2018 -19ம் ஆண்டு சீனாவுக்கு ரயில் மூலம் சென்றார். 2023ம் ஆண்டு ரஷ்யா பயணம் மேற்கொண்டு, அதிபர் புடினை சந்தித்து பேசினார். இந்த இரு நாடுகளுக்கும் ரயில் மூலம் செல்வதே தனக்கு பாதுகாப்பு என்று அவர் கருதுகிறார்.
நேற்றிரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்ட குண்டு துளைக்காத ரயில் மூலம் சீனா சென்றடைந்தார். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானை வீழ்த்தியதன் 80ம் ஆண்டையொட்டி சீனா பிரமாண்ட ராணுவ அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த நிகழ்ச்சியில் கிம்ஜோங்உன் பங்கேற்கிறார். ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்த உள்ளார்.



மேலும்
-
செரப்பனஞ்சேரி ஏரியில் அத்துமீறி கட்டட கழிவுகள் கொட்டி அட்டூழியம்
-
தீர்த்தமலை வனத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களால் சீர்கேடு
-
152 விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்
-
விடுதலை முன்னணி பேரவை சிறப்பு கூட்டம்
-
களியாம்பூண்டி ஊராட்சி முகாமில் மயங்கிய முதியவருக்கு சிகிச்சை
-
சேறும், சகதியுமான வழித்தடம் பொதுமக்கள் கடும் அவதி