புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாலே நிறுவனம் வந்துவிடாது: இபிஎஸ் சாடல்

மதுரை: ஒப்பந்தம் புரிந்துணர்வு போட்டாலே நிறுவனம் வந்துவிடாது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
மதுரையில் வணிகர்கள் சங்க பிரதிநிதிகள் மத்தியில் இபிஎஸ் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி முதலீடுகளை ஈர்த்தோம். ஒரு தொழிற்சாலை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனே நடந்து விடாது. அதில் பல்வேறு முதல்கட்ட பணிகள் இருக்கிறது. நிலம் இருக்க வேண்டும். முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
இதுக்கு இரண்டு வருடங்கள் ஆகிவிடும். எல்லாம் முடிந்த பிறகு தான் அந்த தொழிற்சாலை இயங்க முடியும். சில நேரத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவார்கள். ஆனால் வர மாட்டார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டால் எந்த தொழிலும் வந்துவிட்டதாக கருத முடியாது. தொழில்கள் வளர்ச்சி அடைய, சர்வதேச விமான நிலையங்கள் அவசியம். அதற்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
எங்களுக்கு லோக்சபா எம்பிக்கள் இல்லை. ராஜ்யசபாவில் மட்டும் தான் இருக்கிறது. இருந்தாலும் தமிழக மக்களின் நலன் கருதி, தொழில் வளம் பெருக வேண்டும். இதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசுடன் தொடர்பில் இருந்து செய்வோம். அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்க சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
@block_G@
''மதுரையை தமிழகத்தின் 2வது தலைநகரம் ஆக்க வேண்டும். தொழில்துறையினருக்கு போலீசார் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இடம் வணிகர்கள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். block_G












மேலும்
-
குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்றடைந்தார் கிம் ஜோங் உன்
-
இந்தியா எங்களை தடுக்கிறது: அஜர்பைஜான் அபாண்டம்
-
ஜூனியர் அதிகாரியுடன் ரகசிய உறவு: நெஸ்லே தலைமை நிர்வாக அதிகாரி பணி நீக்கம்
-
அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பு; அவசர கால நிவாரணம் வழங்க ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்
-
காய்ச்சல் பரவல் எதிரொலி: முகக்கவசம் அணிய அறிவுரை
-
வெள்ள நீரை சேமித்து வையுங்கள்: பாகிஸ்தான் அமைச்சரின் புது ஐடியா